கவிஞர் தமிழ்ஒளி நினைவு அறக்கட்டளை உருவாக்க நிதி கோருதல்
சென்னைப் பல்கலைக்கழகம் இலக்கியத் துறையில் கவிஞர் தமிழ்ஒளி நினைவு அறக்கட்டளை உருவாக்க கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக் குழு முயற்சிகள் மேற்கொண்டு உள்ளது. குறைந்தது உருபாய் ஐந்து லட்சம் அறக்கட்டளை நிதியாக பல்கலைக் கழகத்தின் பெயரில் வங்கியில் வைப்புத் தொகை வைத்தால் மட்டுமே அறக்கட்டளை நிறுவ இயலும்.
1924ல் விஜயரங்கனாக புதுச்சேரியில் பிறந்து 1965ல் கவிஞர் தமிழ்ஒளியாக மறைந்தார். நாற்பதே ஆண்டுகள் வாழ்ந்த கவிஞர் தமிழ்ஒளி கவிதை, காவியம், சிறுகதை, கட்டுரை, ஆய்வுக்கட்டுரை, குழந்தைகளுக்கான கவிதைகள், கட்டுரைகள் எனத் தனது பல்துறை இலக்கியப் படைப்புகள் மூலம் தமிழ் இலக்கியத்தின் பன்முக ஆளுமையாகத் திகழ்ந்தவர். இலக்கியப் படைப்பாளியாக, இதழாளராக, பொதுவுடமை இயக்க செயல்பாட்டாளராக உழைக்கின்ற வர்க்கத்திற்கு தன் ஊணினை உருக்கி, தன் உயிரை ஒளியாக்கி பொதுவுடைமைச் சமூகம் படைக்க இலக்கிய கொடை வழங்கியவர் கவிஞர் தமிழ்ஒளி. அத்தகைய சீர்மிகு கவிஞர், தான் நோயுற்ற காலத்தில் நிதி ஆதாரம் இல்லாத காரணத்தால் உரிய மருத்துவ சிகிச்சைக்கான வாய்ப்பில்லாமல் நோய் அவரின் உயிரைப் பறித்தது என்பதைவிட வறுமை அவரை கொன்றது என்பதே உண்மை. தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல் நெருப்புக் கவிஞராக வாழ்ந்து மறைந்தார் கவிஞர் தமிழ்ஒளி.
தான் வாழ்ந்த குறுகிய காலத்தின் பெரும் பகுதியை பொதுவுடமைத் தத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் கனவுகளோடு சென்னையை நடந்தே சுற்றித் திரிந்தவர். வாழ்ந்த காலத்தில் அவரைப் போற்றி அரவணைக்கத்தவறிய தமிழ்நாடு, அவர் மறைந்த அறுபதாவது ஆண்டில் வரக்கடிய அவர் பிறந்த நூற்றாண்டையாவது சீரும் சிறப்புமாக கொண்டாடி, அவர் படைப்புகளை தமிழ் மக்கள் அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டதே கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு.
2022 செப்டம்பரில் கவிஞர் தமிழ்ஒளியின் 98வது பிறந்த நாளில் அவர் வாழ விரும்பிய தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னையின் அடையாளமான சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத் துறையில் கவிஞர் தமிழ்ஒளி நினைவு அறக்கட்டளையை நிறுவிட விழைகின்றோம். பலரின் பங்களிப்போடு கவிஞர் தமிழ்ஒளி நினைவு அறக்கட்டளை சென்னைப் பல்கலைக்கழகத்தில் உருவாக வேண்டும்.
உளங்கனிந்த தங்களின் பங்களிப்பைக் கோருகிறோம். பெரும் நிதியான உருபாய் ஐந்து இலட்சம் உரிய காலத்தில் திரட்டி அறக்கட்டளை உருவாக தங்களின் பேராதரவை நாடுகிறோம். கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக் குழு பெயரில் காசசோலையாகவோ, கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக் குழு வங்கிக் கணக்கில் மின்பரிமாற்றம் மூலமாக நேரடியாகவோ செலுத்தலாம். காசோலை அல்லது வங்கியில் பணம் செலுத்திய ஆவணம் கிடக்ககப் பெற்றவுடன் பணம் பெற்றுக்கொண்டதற்கான ஒப்புகைச்சீட்டு விழாக் குழுவின் நன்றிக் கடிதத்துடன் அனுப்பி வைக்கப்படும்.
“Poet Thamizholi Centenary Committee” என்ற பெயரில் காசோலை இருக்க வேண்டும்.
நேரடியாக வங்கியில் செலுத்துவதற்கான விவரம்:
Name of the A/C : “Poet Thamizholi Centenary Committee“
Name of the Bank: Indian Bank / Branch Name: Mannadi, Chennai
SB A/C No.: 6357766271 / IFSC: IDIB000M016
பணம் செலுத்துபவர்களின் முழு விவரத்தை பணம் செலுத்திய ஆவணத்தின் நகலுடன் இணைத்து விழாக்குழு அலுவலகத்திற்கு அனுப்ப கோருகிறோம்.
நன்றி,
தங்கள் உண்மையுள்ள,
வழக்கறிஞர் ‘சிகரம்’ ச. செந்தில் நாதன்
தலைவர், கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக் குழு
Source: P. B Prince Gajendra Babu