பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரக்கூடிய ஊழல் முறைகேடுகள்
சேலம் ஜூன் 6 இல் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரக்கூடிய ஊழல் முறைகேடுகளை தடுக்க வலியுறுத்தி செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
செய்தியாளர்கள் மத்தியில் சங்கத்தின் மாநில தலைவர் ஏ. டி. கண்ணன் பேசியதாவது.
சேலம் பெரியார் பல்கலைக் கழகம் 1997ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழக ஆட்சி காலத்தில் துவங்கப்பட்டது .
தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை சர்ச்சைக்கு பெயர் போன பல்கலைக்கழகமாக சேலம் பெரியார் பல்கலைக் கழகம் திகழ்ந்து வருகிறது.
இப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்கள் ,பதிவாளர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு லஞ்ச ஒழிப்புத் துறையால் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சேலம் பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தர் ஆணை படி பதிவாளர் மூலமாக பல்கலைக்கழக துறை தலைவர்கள் மற்றும் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரி முதல்வர்களுக்கு மாணவர்கள் அரசியல் சார்ந்த பிரச்சாரங்களில் ஈடுபட கூடாது என்றும் அது முற்றிலும் தடை விதிப்பதாகவும் குறிப்பிட்டு அனுப்பப் பட்ட சுற்றறிக்கை இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக உள்ளது அதை பதிவாளர் துணை வேந்தர் ஆணைப்படி வெளியிட்டார் பதிவாளர்
மேற்கண்ட சுற்றறிக்கையை இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகளின் எதிர்பால் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக் கழகம் இப்படிப்பட்ட சுற்றறிக்கை வெளியிட்டது பின்னணியை பின்னணியை விசாரிக்கும் பொழுது
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு 2 கோடி ரூபாயில்
கட்டப்பட்ட பல்கலைக்கழக கூட்ட அரங்கத்தை 8 கோடி ரூபாய் மராமத்து பணி என்ற பெயரில் செலவிடப்பட்டுள்ளதாக ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது தெரிய வருகிறது.
இப்பல்கலைக்கழகத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக நிரந்தர பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ,தொலைதூர கல்வி இயக்குனர் ,உடற்கல்வி இயக்குனர், நூலகர் உள்ளிட்ட எந்த பதவிகளும் நிரந்தர பதவிகள் ஆக நியமிக்கப்படவில்லை.
இதனால் ஏராளமான நிர்வாக சீர்கேடு ஊழல் இப்பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற வழி வகுத்து வருகிறது .
மேலும் இப்பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளராக செயல்பட்ட கணினி அறிவியல் துறையின் தலைவர் தங்கவேல் என்பவர் அந்தப் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளர் ,கணினி அறிவியல் துறையின் தலைவர், நிதித்துறையின் பொறுப்பாளர்.
ஆகவே மூன்று பதவிகளையும் ஒருங்கே வைத்துக் கொண்டு இவரே தனது துறைக்கு பொருள் வாங்க அனுமதி கோரி ,அனுமதி வழங்கி ,நிதி ஒதுக்கி ஏராளமான ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
தன்னுடைய துறைக்கு 200 உயர் தர கணினிகளை வாங்குவதற்கு எந்த விதமான முறையான ஒப்பந்த புள்ளிகளும் போடாமல் தன்னிச்சையாக தரமற்ற கணினிகளை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மாணவர்கள் தவறான விஷயங்களை பார்ப்பதை தடுப்பதற்காக சோனிக் வால் என்ற மென்பொருளை 20 லட்சம் ரூபாயில் வாங்கி அது பயன்பாடற்ற நிலையில் உள்ளது.
பல்கலைக்கழக வளாகத்தை பைபர் நெட்வொர்க் மூலமாக அனைத்து துறைகளையும் இணைத்து இணையவசதி செய்யும் திட்டம் தொடங்கப் பட்டு பல்கலைக்கழக வளாகத்தில் அது முழுமைப்படாமல் உள்ளது.
பல்கலைக்கழகத்தை தானியங்கி முறையில் கண்காணிப்பதற்கு 80 லட்ச ரூபாய் வரை செலவழிக்க பட்டு முழுமையாக அப்பணி நிறைவு பெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் துறையில் 15 தொழில்நுட்ப வல்லுனர்கள் பணியாற்றி வருகிறார்கள்
இவர்களுக்கு அனைத்து விதமான தகுதி, திறமைகளும் இருந்தும் அவர்களிடம் இப்படிப்பட்ட பணிகளை கொடுக்காமல் அவுட்சோர்சிங் மூலமாக தனியார் நிறுவனங்களுக்கு பணி வழங்கி பல கோடி ரூபாய் பல்கலைக்கழகத்திற்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக புறப்படுகிறது.
Bvoc,MSc Data Science,M.Tech போன்ற பாடப்பிரிவுகள் புனேவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு பல லட்ச ரூபாய் பயிற்சி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இப்பாடப்பிரிவுகளில் ஏழை-எளிய மாணவர்கள் படிக்க வாய்ப்பில்லாத நிலை உருவாகியுள்ளது.
மேற்கண்ட பணியினை மேற்கொள்ள தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது.
இதன் மூலம் பல லட்சம் ரூபாய் லஞ்சம் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு கை மாறியதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் பல்கலைக்கழக மானியக் குழு தமிழக உயர்கல்வித் துறை செயலாளருக்கும், தமிழக அரசுக்கும் ஒரு கடிதத்தை அனுப்பி உள்ளது.
இதில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்விக்கு தாங்கள் அனுமதி வழங்கவில்லை என்றும்,
முறைகேடாக சேலம் பெரியார் பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வியை நடத்தி வருவதாகவும் அதை உடனடியாக கண்காணிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு கடிதம் அனுப்பியுள்ளது .
ஏழு பாடப்பிரிவுகள் தொலைதூர கல்வி மூலம் இணைய வழியில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவின் உரிய அனுமதியின்றி நடத்தப்பட்டு வருகிறது தொலை நிலைக்கல்வியில் பயின்ற உள்நாட்டு, வெளிநாட்டு மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.
சமீபத்தில் பல்கலைகழகத்தில் NAAC கமிட்டியின் ஆய்விற்காக வருவதையொட்டி பல்கலைக்கழக வளாகத்தை தூய்மை செய்வதற்காக ஜேசிபி இயந்திரம் கொண்டு 12 லட்ச ரூபாய்க்கு மராமாத்து பணி செய்ததாக போலி கணக்கு எழுத பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் முன்னாள் உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா மற்றும் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோர் கணினி அறிவியல் பாடப்பிரிவில் துறைத்தலைவர் தங்கவேல் அவர்கள் மீது ஊழல் முறைகேட்டுக்கு முகாந்திரம் உள்ளதாகவும் இவரை பணி இடைநீக்கம் செய்து விசாரணை குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்ட கோப்புகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேற்கண்ட நபர் பல்கலைக்கழகத்தின் 12 குழுக்களில் உறுப்பினராக இருந்து கொண்டு பல்கலைக்கழகத்தில் ஏராளமான ஊழல் முறைகேட்டுக்கு வழி வகுத்துக் கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
MBA தொலைதூர பாடப்பிரிவில் பாஸ்டன் என்ற தனியார் நிறுவனம் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு 500க்கும் மேற்பட்ட மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது.
ஒரு மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக 4 லட்சம் ரூபாய் வரை வசூலித்ததாக கூறப்படுகிறது
இதில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முதல் பல்வேறு ஊழியர்கள் வரை லஞ்சப் பணம் கைமாறி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கழகத்தில் பதிப்புத் துறை செயல்பட்டு வருகிறது .
பதிப்புத் துறையில் முன்னாள் துணைவேந்தர் முத்து செழியன் மற்றும் பதிப்பு துறை இயக்குனர் பெரியசாமி ஆகியோர் தங்களுடைய சுய சரிதை குறித்த புத்தகத்தை அடிப்பதற்கு முறைகேடாக பயன்படுத்தியதாக ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டு இதுவரை முழுமையான விசாரணை நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது .
அடித்த புத்தகங்கள் அதை விற்ற கணக்குகள் ஏதும் இல்லை
பல்கலைக்கழக மானியக்குழு மாணவர்களின் சிறந்த ஆராய்ச்சியை உலக அளவில் வெளிக்கொணர்வதற்கு உருவாக்கப்பட்ட பதிப்புத்துறை பணியை அதற்காக மேற்கொள்ளாமல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர்களும் பதிப்பாளர்களும் முறைகேடாக பயன்படுத்தி வருவது அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.
பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களுக்கு என்று விடுதி செயல்பட்டு வருகிறது .
ஒரு அறையில் 3 மாணவர்கள் தங்கும் அளவு மட்டுமே உள்ளது.
ஆனால் விடுதி அறையில் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை தங்க வைத்து மாணவர்கள் மிகப்பெரிய அளவிற்கு சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் .
உடனடியாக பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர் விடுதியை கட்டி மாணவர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல்கலைக்கழகத்தின் வளாக இயக்குனராக செயல்பட்டு வரக்கூடிய ஜெயப்பிரகாஷ் என்பவர் ஏராளமான போலி ஆவணங்களை தயார் செய்து பல லட்சம் ரூபாய் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பல்கலைக்கழகத்தில் தற்காலிக பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வரக்கூடிய தொழிலாளர்களை ஆட்டையாம்பட்டி பகுதியில் இருக்கக்கூடிய தனது தோட்டத்தில் சனி மற்றும் ஞாயிறு நாட்களில் பணி செய்ய வைத்து அதற்கான பணத்தை பல்கலைக்கழக நிதியிலிருந்து கணக்கு எழுதி கையாடல் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
பல்கலைக்கழகத்தின் புவிசார் அறிவியல் பாட பிரிவின் தலைவராக இருக்கக் கூடிய ராம்குமார் என்பவர் பல்கலைக்கழக பணி நேரங்களில் தன்னுடைய சமூக வலைதள கணக்குகளை அரசுக்கு எதிரான ஏராளமான கருத்துக்களை மத வெறி, சாதி வெறி தூண்டக்கூடிய பிரிவினைவாத கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
அரசு பணியாளர் செயல்பாட்டு வரை முறைகளுக்கு மாறாக பணி நேரத்தில்செயல்பட்டு வரும் பேராசிரியர் ராம்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் பல்கலைக்கழக நிர்வாகம் மெத்தனம் காட்டி வருகிறது.
தற்போது பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக செயல்படக்கூடிய ஜெகநாதன் ஏற்கனவே கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பொழுது ட்ராக்டர் இயந்திரம் வாங்கியதில் ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது .
இப்படிப்பட்ட ஊழல் வழக்கில் சிக்கியுள்ள நபரை தமிழக ஆளுநர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமித்தது பெரியார் பல்கலைக்கழகத்தில் ஏராளமான ஊழல் முறைகேட்டுக்கு வழி வகுத்துள்ளார் .
எனவே தமிழக அரசு துணை வேந்தர் ஜெகநாதன் மீதான ஊழல் வழக்குகளை உடனடியாக விசாரிக்க தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று மாணவர் சங்கத்தின் சார்பில் இந்திய வலியுறுத்துகிறோம்.
சமூக நீதிப் போராளி தந்தை பெரியார் பெயரில் இயங்கக்கூடிய சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 25 ஆண்டுகளாக ஆசிரியர் நியமனத்தில் இட ஒதுக்கீட்டு முறை முறையாக பின்பற்றப்படாமல் உள்ளது.
பல்கலைக்கழக ஆசிரியர் நியமனத்தில் அருந்ததியர் உள் ஒதுக்கீடு, முஸ்லிம் இட ஒதுக்கீட்டு, பழங்குடியின மக்களின் இட ஒதுக்கீட்டையும் மாற்று திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடும் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.
மேலும் இப் பல்கலைக்கழகத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரக்கூடிய 400 தினக்கூலி பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்களை தமிழக அரசின் அரசாணைப்படி நிரந்தரப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் .
இவ்வாறு தொடர்ச்சியாக ஏராளமான ஊழல் முறைகேடு குற்றச்சாட்டுக்கு உள்ளாகி வரக்கூடிய சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் நிர்வாக சீர்கேட்டை மாணவர் அமைப்புகளும், ஆசிரியர் அமைப்புகளும் அம்பலப்படுத்தி விடக்கூடாது என்ற உள்நோக்கத்தோடு சேலம் பெரியார் பல்கலைக் கழகம் பேராசிரியர்கள், மாணவர்கள் ,பணியாளர்கள் பல்கலைக்கழகத்தின் அனுமதியின்றி செய்தியாளர்களை சந்திக்க கூடாது என்ற சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது .
அரசியல் சார்ந்த பரப்புரைகளை பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளில் மாணவர்கள் ஈடுபடக்கூடாது அதை தடை செய்ய வேண்டும் என்று சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.
எனவே தான் தோன்றித்தனமாக தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தக்கூடிய வகையில் செயல்பட்டு வரும் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் ஊழல் முறைகேடுகளை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் கேட்டுக் கொள்கிறது.
மேலும் இதில் நடைபெற்று வரக்கூடிய ஊழல் முறைகேடுகளை விசாரிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டு ஊழல் பெருச்சாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் மாணவர் நலனை பாதுகாக்க உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் மாணவர் பேரவைத் தேர்தலை ஜனநாயக முறையில் நடத்திட வேண்டும் .
பல்கலை கழக வளாகத்தில் செயல்பட்டு வரும் நூலகம் மத்திய பல்கலைக்கழகங்களில் இயங்குவதைப் போல 24 மணி நேரமும் வானவர் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும்.
அனைத்து துறைகளிலும் மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சுத்தமான கழிவறை வசதிகளை உறுதி செய்ய வலியுறுத்தியும்,
பல துறைகளில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் சென்று வரக்கூடிய வகையில் கட்டமைப்பு இல்லாத தால் உடனடியாக கட்டமைப்பை நீதிமன்றம் மற்றும் தமிழக அரசின் உத்தரவு மற்றும் வழிகாட்டுதல்படி கட்டமைப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும், தனியார் துறையிடம் வழங்கப்பட்டுள்ள பல்வேறு பாடப்பிரிவுகளை உடனடியாக ரத்து செய்து ஏழை மாணவர்களும் பயிலக் கூடிய வகையில் கல்வி கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும் பல்கலைக்கழகம் உயர்த்த திட்டமிட்டு உள்ள மாணவர்களின் கல்வி கட்டணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் இட ஒதுக்கீட்டு முறையை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் அனைத்து துறைகளில் பயின்று வரக்கூடிய ஆய்வு ஆராய்ச்சி மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் மற்றும் மத்திய மாநில அரசுகளின் கல்வி உதவித்தொகை ஊழல் முறைகேடு இன்றி தகுதியான நபர்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என
மேற்கண்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
பல்கலைக்கழகத்தையும் அதில் படிக்கக்கூடிய மாணவர்களின் வாழ்க்கையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி வருகின்ற ஜூன் 9-ஆம் தேதி சேலம் பெரியார் பல்கலை கழகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை இந்திய மாணவர் சங்கத்தின் சேலம் மாவட்ட குழு சார்பில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்தியாளர் சந்திப்பில் சங்கத்தின் மாநிலத் தலைவர்ஏ.டி. கண்ணன் குறிப்பிட்டார்.சந்திப்பின் பொழுது சங்கத்தின் சேலம் மாவட்ட தலைவர் எஸ் பவித்திரன் ,சேலம் மாநகர செயலாளர் அருண்குமார், மாவட்ட நிர்வாகிகள் அரவிந்த் உள்ளிட்ட ஏராளமான உடனிருந்தனர்.