Mayday Interview – G.Ramakrishnan
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் பேட்டி
நாமக்கல் மே 1: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது.
இவ்வாண்டு மே தினம் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது 1923ஆம் ஆண்டு சென்னையில் செங்கொடி ஏற்றி சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் அவர்கள் இந்தியாவிலேயே முதல்முறையாக மே தின விழாவை கொண்டாடினார்.
1923ஆம் ஆண்டு சிங்காரவேலர் கொண்டாடிய மே தின விழாவில் இருந்து இவ்வாண்டு நூற்றாண்டு நிறைவு பெறுகிறது.அந்த அடிப்படையில் இந்த ஆண்டு மே தின விழா என்பது முக்கியத்துவம் வாய்ந்தது.
குறிப்பாக நேற்று டெல்லியில் நடைபெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதமர், மாநில முதலமைச்சர்கள் கலந்துகொண்ட மாநாட்டில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சொன்ன கருத்து என்பது முக்கியமானது .
நாடாளுமன்றத்தில் சட்டங்கள் நிறைவேற்றப்படும் பொழுது ஒவ்வொரு பிரிவு குறித்தும் நாடாளுமன்றத்தில் ஆழமாக விவாதித்து சட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தனது கருத்தை தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் பிரதமரும் கலந்துகொண்டிருந்தார் .ஆனால் பாஜக மோடி தலைமையில் ஆட்சி அமைத்த பின்னர் நிறைவேற்றப்பட்ட அனைத்து சட்ட மசோதாக்களும் ஆழமாக விவாதிப்பதற்கு மறுத்துவிட்டனர்.அனுமதிக்காமல் 3 வேளாண் சட்டங்களைக் கூட ஆழமாக விவாதிக்க அனுமதிக்காமல் நிறைவேற்றினர்.
ஏற்கனவே தொழிலாளர்கள் கண்ணீரும் செந்நீரும் சிந்திப் போராடி பெற்ற உரிமை வேலை நிறுத்த உரிமை உள்ளிட்ட அனைத்து தொழிலாளர் உரிமையையும் பறிக்கும் பறிக்கக்கூடிய அடைப்படையில் பிரதமர் மோடி தலைமையிலான பிஜேபி அரசாங்கம் 44 தொழிலாளர் சட்டங்களை திருத்தி நான்கு தொகுப்புகளாக கொண்டு வந்துள்ளது.
வேலை நிறுத்த உரிமை பறிக்கபட்டருக்கிறது.மே தினத்தின் முக்கியத்துவம் என்ன?
8 மணி நேர வேலை என்பது தான்.மே தினத்தின் முக்கியமான கோசம் முழக்கமே !அதற்காகத்தான் சிக்காகோவில் தொழிலாளர்கள் போராடினர்.துப்பாக்கிச் சூடு ஆளாகினர்.அதன்பின்னர் தான் எல்லா நாடுகளிலும் எட்டு மணி நேர வேலை என்பதற்கான சட்டம் கொண்டு வந்தனர் .ஆனால் மதியம் மோடி அரசாங்கம் தனியார் நிறுவனங்களே வேலை நேரத்தை தீர்மானிக்கலாம் என்று மோடி அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது.பிஜேபி ஆளக்கூடிய பல மாநிலங்களில் 8 மணி நேர வேலைக்கு பதிலாக ஒன்பது மணி நேரம், 10 மணி நேரம் வேலை கட்டாயம் என்று சட்டம் ஆகியிருக்கிறார்கள் .
இதைப்பற்றி தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பேசும்போது குறிப்பிட்டது ஒரு சட்டம் இயற்றும் பொழுது ஆழமாக விவாதிக்க வேண்டும் என்பது.ஆனால் மோடி அரசு தொழிலாளர் சட்டங்களை திருத்த முடிவு என்பது நாடாளுமன்றத்தில் ஆழமாக பாதிக்காமல் நிறைவேற்றி வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது.
இவற்றை எதிர்த்து தான் நாடு முழுவதும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் இன்று மே தினத்தில் போராடிக் கொண்டிருக்கின்றனர்.குறிப்பாக நாடு முழுவதும் லட்சத்துக்கும் மேற்பட்டோர் விசாரணையின்றி சிறைகளில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர் இவர்களை விசாரணை செய்து விடுதலை செய்ய வேண்டும் என்று என்று பிரதமர் மோடி பேசும்போது குறிப்பிட்டார்.சாரணை கைதிகளை விடுதலை செய்வதை மாநில அரசுகள் மேற்கொள்ளப்படும் .மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் சிபிஐ தேசிய புலனாய்வு முகமை இச்சட்டத்தின் அடிப்படையில் பீமா குரேகான் வழக்குகளில் அம்பேத்கரின் பேரன் உள்ளிட்ட 15 பெயர் சிறையில் உள்ளனர்.
அவர்களை கைது செய்தது மாநில அரசுகள் அல்ல .மத்திய அரசு தான் கைது செய்தது.தமிழ்நாட்டில் இருந்து சென்ற பாதிரியார் ஸ்டாண்ட் சாமி கைது செய்யப்பட்டு சிறையிலே இறந்துவிட்டார்.இவற்றையெல்லாம் செய்த ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் சிபிஐ தேசிய புலனாய்வு முகமை ஆகியவை மூலம் கைது செய்யப்பட்டுள்ள 15 பேரையும் முதலில் விடுதலை செய்ய பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்நியர் ஆட்சி காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட பல காலாவதியான சட்டங்களை மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி பேசினார் அது சரிதான் .அதே சமயத்தில் நாம் பிரதமர் மோடியை மத்திய அரசை பார்த்து நாம் கேட்க கூடிய கேள்வி என்னவென்றால் அன்னியர் ஆட்சியை அகற்றுவதற்காக சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்ட மகாத்மா காந்திஜி, பண்டிதர் ஜவகர்லால் நேரு, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட வெள்ளைக்காரர்கள் கொண்டு கொண்டுவரப்பட்ட தேச துரோக சட்டத்தின் அடிப்படையில் தான் தான் கைது சிறையில் அடைத்தனர் .
குறிப்பாக மீரட் சதி வழக்கு, கான்பூர் சதி வழக்கு உள்ளிட்டவை குறிப்பிடத்தகுந்தவை.பல முக்கிய நாளிதழ்கள் தலையங்கம் எழுதியுள்ளது. டைம்ஸ் ஆப் இந்தியா ,தி ஹிந்து போன்ற பத்திரிக்கைகள் தேச துரோக சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென்று விரிவான கட்டுரைகளை எழுதியுள்ளனர்.காலாவதியான சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று சொல்லக்கூடிய மோடியைப் பார்த்து நான் கேட்டுக்கொள்கின்றேன் காலாவதியான தேச துரோக சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் .
அடுத்ததாக மாநில அரசு இரண்டாவது முறையாக நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும்.என்று இரண்டு மசோதாக்களை சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.முதலில் அனுப்பி வைத்த ஆளுநர் திருப்பி அனுப்பினார் .இரண்டாவது முறையாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பது.நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என்பது தான் கேட்கின்றோம் .
அந்த மசோதாவை ஆளுநர் காலம் தாழ்த்தாமல் உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் .அதைத் திருப்பி அனுப்புவதற்க்கோ ஜனாதிபதிக்கு அனுப்பாமல் வைக்காமல் காலம் தாழ்த்துவதற்க்கோ ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை.ஆளுநரின் பணி போஸ்ட் மாஸ்டர் பணி தான் .ஆகவே காலம் தாழ்த்தாமல் ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன் என்று கூறினார்.அடுத்ததாக நடந்து கொண்டிருக்கக் கூடிய சட்டமன்ற கூட்டத்தொடரில் மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனத்தை ஆளுநரே செய்யக்கூடாது மாநில அரசு தான் செய்யும் என்று நிறைவேற்றப்பட்ட மசோதா என்பது ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டிய அவசியம் கிடையாது .நமது நாட்டில் கல்வி என்பது ஒத்திசைவு பட்டியலில் உள்ளது.ஆகவே துணைவேந்தர் நியமனம் என்பது மாநில அரசு முடிவெடுக்க வேண்டியது .பிஜேபி ஆளும் மாநிலங்களில் அந்த மாநில அரசுதான் துணைவேந்தர் நியமனங்களை செய்து வருகிறது.குஜராத் ,கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அந்த அதிகாரத்தை மாநில அரசுதான் செய்து வருகிறது.
எனவே தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட துணைவேந்தர் நியமன அதிகாரம் மாநில அரசுதான் செய்ய வேண்டுமென்ற மசோதாவிற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.சமீபத்தில் பிரதமர் மோடி அவர்கள் மாநில அரசுகளை விமர்சனம் செய்தார் .பெட்ரோல் டீசல் பெட்ரோலிய பொருட்களுக்கான வரிகளை மாநில அரசுகள் குறைக்கவேண்டும் என்று குறிப்பிட்டார் .
2014 இல் இருந்து 2021 வரை 19 லட்சம் கோடி ரூபாய் வரிகள் மூலம் மக்களிடம் இருந்து பெட்ரோலிய பொருட்கள் மூலம் மத்திய அரசு கொள்ளை அடித்துள்ளது .மத்திய அரசு பெட்ரோலிய பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள அனைத்து வரிகளையும் குறைத்தாலே பெட்ரோல் டீசல் விலை பாதியாக குறையும்.குறிப்பாக கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெட்ரோல் டீசல் பெட்ரோலிய பொருட்களின் மொத்த விலை என்பது கடுமையாக உயர்ந்துள்ளது.இதன் விளைவாக நாடு முழுவதும் விலைவாசி உயர்வு கட்டுக்கடங்காமல் உயர்ந்து ஏழை, எளிய நடுத்தர மக்களை மிகப்பெரிய அளவிற்கு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
ஆகவே மத்திய அரசாங்கம் ஏற்கனவே போட்டுள்ள கலால் வரி, செஸ் வரி ,எக்ஸ் வரி உள்ளிட்டவற்றை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன் என்று குறிப்பிட்டார் .அடுத்ததாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக கடந்த 10 நாட்களாக எங்கே எனது வேலை?
என்ற தமிழகம் முழுவதும் நடைபெற்ற சைக்கிள் பேரணி திருச்சியில் சங்கமித்து கொண்டிருக்கிறது.அவர்கள் வைத்திருக்கூடிய முழக்கம் என்பது அனைவருக்கும் வேலை அல்லது வேலை கிடைக்கும் வரை நிவாரணம் .2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் பொழுது பிஜேபி அரசாங்கம் மோடி அரசு ஆட்சிக்கு வரும் பொழுது வருடத்திற்கு இரண்டு கோடி பேருக்கு வேலை கொடுப்பேன் என்று வாக்குறுதி அளித்தது .மோடி அரசின் 7 ஆண்டு ஆட்சிக் காலத்தில் அவர்கள் வாக்குறுதிப்படி இதுவரை 14 கோடி பேருக்கு வேலை கொடுத்து இருக்க வேண்டும்.
ஆனால் உண்மை என்ன வென்றால் இருக்கக்கூடியவர்கள் வேலையும் பறிபோய் இருக்கிறது என்பதால் நாட்டின் உண்மையான நிலை.அதுவரை வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கின்றேன்.அடுத்ததாக வருகின்ற மே மாதம் 6 தேதி தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனைப்பட்டா கேட்டு மனு கொடுக்கக்கூடிய போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்
10 வருடம் ,15 வருடம் ,25 வருடங்களுக்கு மேலாக பயன்பாடற்ற நீர்நிலை கோயில் தரிசு உள்ளிட்ட அரசு புறம்போக்கு நிலங்களில் குடிசை போட்டு குடியிருந்து வரக்கூடிய மக்களுக்கு இன்றுவரை மனை பட்டா கிடைக்காத சூழல் உள்ளது.சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் படி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.அதை நாங்கள் வரவேற்கின்றோம்.
அதே சமயத்தில் எந்த வகையிலும் நீர்நிலைகளுக்கு பாதிப்பில்லாத பகுதிகளில் நீர்நிலை புறம்போக்கு குடியிருப்பவர்களுக்கு தமிழக அரசு உடனடியாக நிலத்தை வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.
சென்னை பேண்ட்ஸ் நகரில் நான்காயிரம் ஐயாயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.அவற்றால் நீர் நிலைகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் கிடையாது.இந்நிலையில்உயர்நீதிமன்றம் உடனடியாக மேற்கண்ட நீர்நிலைகளில் குடியிருப்பவர்கள் இடங்களை ஏவிஷன் செய்ய உத்தரவிட்டு உள்ளது .எனவே மாநில அரசு உடனடியாக நீர்நிலைகளுக்கு பாதிப்பில்லாத அரசுக்கு பயன்படாத நிலங்களை உடனடியாக வகை மாற்றம் செய்து நெடுங்காலமாக குடியிருந்து வரக்கூடிய ஏழை ,எளிய ,நடுத்தர மக்களுக்கு மனை பட்டா வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் மே 6ஆம் தேதி மாநில அரசை வலியுறுத்தி போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளோம் என்பதனை தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் செய்தியாளர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்ட குழு அலுவலகத்தில் சந்தித்த பொழுது மாவட்ட செயலாளர் கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நா .வேலுச்சாமி, ஏடி கண்ணன்(SFI) மாவட்ட குழு உறுப்பினர் கு.சிவராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக காலை 11 மணி அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் மே தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியினை ஏற்றி வைத்து அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் பேசினார்.
INTERVIEW : A.T.Kannan (SFI TN State President)