ரோகித் வெமுலா தற்போது நம்மோடு இல்லை. குண்டூர் மாவட்டத்தில் 1989 ம் ஆண்டு ஜனவரி மாதம் 30 தேதி ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சோந்த ஏழைக்குடும்பத்தில் ரோகித் பிறந்தார்.கார்ல் சாகான் போன்ற அறிவியல் எழுத்தாளராக ஆகவேண்டும் என்ற லட்சிய கனவோடு தான் ஹைதராபாத் மத்திய பல்கலைகழகத்திற்குள் தொழில்நுட்பம்,சமூக படிப்பியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வினைத் தொடர்ந்தார்
ரோகித் வெமுலா. மிகச்சிறந்த லட்சியத்தைக் கொண்டிருந்த வெமுலா கனவோடு நிற்காது அதை நிறைவேற்றும் விதமாக பல்கலைகழக மானிய குழுவின்;துசுகு மற்றும் ஊளுஐசு தேர்ச்சி பெற்று மிகச்சிறந்த ஆய்வாளராகவும், பெயர்பெற்ற ஒரு மாணவர் தலைவராகவும் விளங்கினார்.